Types of Science
விஞ்ஞானமும் அதன் வகைகளும்
விஞ்ஞானம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு துறையாகும். மனித நாகரீகங்கள் எப்போது தோற்றம் பெற்றதோ அன்றே விஞ்ஞானத்தின் தோற்றமும் ஆரம்பமாகியதாக கூறப்படுகிறது. மனிதன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு தன்னைச் சூழ உள்ள பொருட்களை பார்த்து வியக்கத் தொடங்கி விஞ்ஞானம் ஆரம்பம் ஆகியது. விஞ்ஞானம் என்பது ஆங்கிலத்தில் science எனப்படுகிறது. அந்த வகையில் விஞ்ஞானம் எனும் பதம் கண்டுபிடித்தல், அறிவு எனப் பொருள்படும்.
விஞ்ஞானம் பல்வேறு விடயங்களையும் தெளிவாக ஆய்வு செய்திருந்த போதிலும் ஆய்வு செய்கின்ற விடயத்தை வைத்து விஞ்ஞானத்திற்கு குறித்த ஒரு வரைவிலக்கணத்தை முன்வைப்பது கடினமாகும். காரணம் விஞ்ஞானம் பரந்துபட்டது. எனவே அதனை குறிப்பிட்ட எல்லை வரையறைக்குள் இருந்து விளக்க முடியாது. எனினும் பொதுவாக விஞ்ஞானம் என்பதை " அறிவையும் புலக்காட்சியையும் ஆதாரமாகக் கொண்டு மக்களுக்குத் தேவையான சௌகரியங்களை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு புதிது புதிது காணும் துறை விஞ்ஞான துறை". என குறிப்பிடலாம். மேலும் விஞ்ஞானம் என்பதை இயற்கை உலகு பற்றிய கோட்பாட்டு ரீதியான, அனுபவ ரீதியான நடைமுறை சார்ந்த துறை எனலாம்.
விஞ்ஞானம் ஒரு பரந்துபட்ட பரப்பாக காணப்படுவதால் விஞ்ஞானம் என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் விஞ்ஞானம் என்பதற்கு விஞ்ஞானிகளும் ,விஞ்ஞானமுறையியராளர்களும் முன்வைத்த கருத்துக்கள் பின்வருமாறு,
J.S மில்- "காரண காரிய அடிப்படையில் விளக்க வல்ல அறிவியல் துறை விஞ்ஞானம் ஆகும்" என்றார்.
கலிலியோ கலிலி- "உள்ளதை உள்ளவாறு ஆய்வு செய்வதே விஞ்ஞான உளப்பாங்கு" என்றார்.
ஐசக் நியூட்டன்- "ஏதாவது முறையியல் ஊடாக விளக்கவல்ல அறிவியல் துறை விஞ்ஞானம் ஆகும்" என்றார்.
விஞ்ஞானம் ஆனது பரந்துபட்ட பொருளில் பயன்படுத்தப்படுவதாலும், பலதரப்பட்ட ஆய்வு விடயத்தை கொண்டிருப்பதாலும் அதனை பல்வேறு வகைப்படுத்த வேண்டியுள்ளது.
1) அனுபவ விஞ்ஞானம்
அனுபவ விஞ்ஞானம் என்பது இயற்கையில் இடம்பெறும் பல்வேறு வகையான தொடற்றப்பாடுகள் பற்றியும் பௌதீக உலகில் காணப்படுகின்ற சடப்பொருட்கள் மற்றும் உயிரிகள் பற்றியும் பல்வேறு வகையான ஆய்வு முறைகளின் ஊடாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரு முறை ஆகும். இங்கு புலக்காட்சிப் பரிசோதனை, அவதானம் என்பன பயன்படுத்தப்படுகன்றன. இவ் அனுபவ விஞ்ஞானமானது இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் என இரு வகைப்படும்.
I. இயற்கை விஞ்ஞானம்
இயற்கையின் தோற்றப்பாடுகளையும், இயற்கையின் அம்சங்களையும், இயற்கையின் நிகழ்ச்சிகளையும், இயற்கையில் காணப்படும் உயிரிகளையும் ஆராயும் ஒரு விஞ்ஞான முறையே இயற்கை விஞ்ஞானம் ஆகும். இங்கு அனுபவ ரீதியான ஆய்வு முறைகளான பரிசோதனை, அவதானம், தொகுத்தறி முறை, உயிர்த்தெறி முறை போன்ற முறைகளின் ஊடாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம் என இரு வகைப்படும்.
*பௌதீக விஞ்ஞானம்
உயிரற்ற பொருட்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானம் பௌதீக விஞ்ஞானம் ஆகும். அதாவது இயற்கையான உலகில் காணப்படும் சடப்பொருட்கள், சக்தி,கனிய வளங்கள், மற்றும் பௌதீக தோற்றப்படுகள் போன்ற அம்சங்களை அவதானம் பரிசோதனை போன்ற ஆய்வு முறைகள் ஊடாக ஆய்வு செய்யப்படுகின்றது. இவ் விஞ்ஞானமானது அணு முதல் கோள்கள்வரைஆய்வுசெய்கிறது.இதுஇரசாயனவியல்,பௌதீகவியல் எனும் இரு பிரிவுகளை உள்ளடக்குகின்றது.
இரசாயனவியல்: இது விஞ்ஞானத்தின் அடிப்படை ஆகும். அணுக்கலால் அதாவது தனிமங்கள், மூலக்கூறுகள், இணைந்து உருவாகும் சேர்மங்கள் பற்றி ஆராயும் ஓர் அறிவியல் துறை ஆகும். சடப்பொருள் ஒன்று எவ்வாறு உருவாக்கப்பட்டது. அதன் பௌதீக இயல்பு எவ்வாறு காணப்படும். அதன் அமைப்பு எவ்வாறு இருக்கும், சடப்பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் என்பன பற்றி ஆய்வு செய்வதாகும். உதாரணமாக,நீர் கொதிக்கும் போது என்ன நிகழ்கிறது, அது எவ்வாறு நீராவியாக மாறுகிறது என்பதை ஆய்வு செய்தல்.
பௌதீகவியல்: பௌதீகவியல் என்பது அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். இது சக்தி மற்றும் சடப் பொருட்களின் நடத்தை பற்றிய ஒரு கற்கை ஆகும். இது சடப்பொருட்களின் ஆற்றல், விசை, இயக்கம் என்பன ஆய்வு செய்கிறது.
*உயிரியல் விஞ்ஞானம்
இது உயிருள்ள அங்கிகளை ஆய்வு செய்யும் ஒரு விஞ்ஞானம் ஆகும். உலகில் காணப்படுகின்ற குறைந்த தரத்தில் உள்ள தாவரங்கள் விலங்குகள் நுண்ணுயிர்கள் என்பவற்றின் தோற்றம் அமைப்பு நடத்தை வாழ்க்கைமுறை என்பவற்றை அனுபவ ரீதியான ஆய்வு முறைகளான பரிசோதனை போன்ற ஆய்வுகள் ஊடாக ஆய்வு செய்யப்படுகின்றது. இவ் விஞ்ஞானம் ஆனது விலங்கியல் தாவரவியல் உயிரியல் என மூன்று வகையாக நோக்கப்படுகின்றது.
விலங்கியல்: உயிரியல் ஒரு பிரிவான இது விலங்குகளை பற்றி அறியும் ஒரு துறையாகும். இது உயிரினங்களின் விசேட உயிரியல் நடத்தையை விளக்கும். மேலும் இதில் உயிர் வாழ்கின்ற மற்றும் அழிவடைந்த விலங்குகளின் பரிமாணம், உயிரியல் வகைப்பாடு, நடத்தை, மரபியல், கருவியல் மற்றும் கட்டமைப்பு போன்றவை ஆராயப்படுகின்றன.
தாவரவியல்: தாவரவியல் என்பது தாவர அறிவியல் அல்லது தாவர உயிரியல் என அழைக்கப்படுகின்றது. தாவரங்களின் வாழ்க்கையைப் பற்றி கற்கக் கூடிய ஒரு அறிவியல் ஆகும் இங்கு தாவரங்களின் பண்புகள் தோற்றம் அவற்றின் பரிமாணம் மற்ற உயிரினங்களுடனான தொடர்புகள், தாவரங்கள் அவை காணப்படும் சூழலில் அவை ஏற்படுத்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் என்பன ஆய்வுகள் பரிசோதனைகள் மூலம் ஆராயப்படுகின்றன.
நுண்ணுயிரியல்: நுண்ணுயிரிகள் என்றால் வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத சிறிய உயிரினங்கள் ஆகும் எனவே நுண்ணுயிரியல் என்பது நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய தணிக்கலம் அல்லது கூட்டுக்கலங்களால் ஆன உயிரினங்களை பற்றி ஆராயும் அறிவியல் துறை ஆகும். 300 ஆண்டுகளுக்கு முன்பு முதல் நுண்ணியிரிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் நுண்ணுயிரியல் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. காரணம் தற்போது வரை உயிர் கோலத்தில் காணப்படும் நுண்ணுயிர்களில் மிகச்சிறிதளவு மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
॥. சமூக விஞ்ஞானம்
சமூக விஞ்ஞானம் என்பது சமூக விடயங்களை பற்றி அதாவது மனித நடத்தைகளை பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞான வகை ஆகும்.இவ் ஆய்வு முறைகள் இயற்கை விஞ்ஞான ஆய்வு முறைகளில் இருந்து வேறுபட்டதாக காணப்படும். இங்கு மனிதனும் மனித சமுதாயமும், மனிதனும் அவனது பொருளாதாரப் பின்னணியும் போன்ற மனிதனோடு தொடர்புபட்ட எல்லா விடயங்களும் பேட்டி முறை, ஒப்பீட்டு முறை, வளர்ச்சி முறை, வினா கொத்து முறை, அளத்தல், தனியாள் ஆய்வு முறை, புள்ளிவிபரவியல் முறை போன்ற பல்வேறு ஆய்வு முறைகள் ஊடாக ஆய்வு செய்யப்படுகிறது. இதில் அரசியல், சமூகவியல், வரலாறு, மெய்யியல், பொருளியல், மானிடவியல் என்பன உள்ளடங்கும்.
2) அனுபவமில் விஞ்ஞானம்
அனுபவமில விஞ்ஞானம் என்பது அறிவை மாத்திரம் பயன்படுத்தி எவ்வித சந்தேகமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம விதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்கின்ற ஓர் விஞ்ஞான துறையாகும். புலக்காட்சி, பரிசோதனை, அவதானம் போன்ற புல அனுபவ முறைகளில் தங்கியிராத அனுபவம் சாராத விஞ்ஞான வகைகளே இதில் அடங்கும். இவ் அனுபவமில விஞ்ஞானம் ஆனது நியம விஞ்ஞானம் , நியமம் கூறும் விஞ்ஞானம் என இரு வகையாக பிரிக்கப்படும்.
।. நியம விஞ்ஞானம்
நியம விஞ்ஞானம் என்பது நிர்ணயிக்கப்பட்ட நியம விதிகளை பயன்படுத்தி எண்கள், குறியீடுகள் பற்றி ஆய்வு செய்யும் துறை ஆகும். அதாவது இங்கு ஏதாவது ஒரு விதிக்கொள்கையை அடிப்படையாக வைத்து அந்த விதிக்கு அமைவாக இருந்தால் சரியானதாகவும், விதி மீறப்பட்டால் பிழையானதாகவும் கூறும் பங்கு காணப்படும். இதில் கணிதம், அளவியல் என்பன அடங்கும்.
கணிதம்:- கணிதம் என்பது வணிகத்தில் எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில் , நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும் .கணிதம் ஆனது இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம் , நிதியியல், சமூக அறிவியல் போன்ற பல துறைகளிலும் இன்று மிக முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றது
அளவையியல்:- அளவையியல் என்பது அறிவு அடிப்படையில் ஓர் உண்மையாகும். ஒரு பொருள் அல்லது ஒரு விடயம் பற்றி அது ஏற்கக் கூடியது எது என்று அறியவும் , ஒரு முடிவுக்கு வரவும், அவை பற்றி உறுதியாக ஒரு முடிவை நிலை நிறுத்தவும் பயன்படும் ஒரு அடிப்படை கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் ஆய்வுத் துறை ஆகும் . அதாவது நியம வாய்ப்பு பற்றி ஆராய்கின்ற ஒரு பாட துறையே அளவையியல் என்று கூறப்படும்.
॥ நியமம் கூறும் விஞ்ஞானம்
நியமம் கூறும் விஞ்ஞானம் என்பது அவதானிப்புக்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சரி, பிழை, உண்மை, பொய், வாய்ப்பின்மை போன்ற மதிப்பீடுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானம் ஆகும்.மேலும் இங்கு விதிக்கொள்கைக்கு விளக்கம் கூறும் அதேவேளை விதிக்கொள்கை மீறும் போது ஏற்படும் பலாப்பலன்கள் பற்றியும் கூறும். இதில் அழகியல் ஒழுக்கவியல் என்பன அடங்கும்.
ஒழுக்கவியல் :- இது நியமம் கூறும் விஞ்ஞானங்களில் ஒன்றாகும். இது சரி, பிழை , நன்மை , தீமை போன்ற பெருமானங்களை மதிப்பீடு செய்வதோடு தவறான செயல்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கும். உதாரணமாக- ஒழுக்கவியல்:- களவெடுத்தல் கூடாது எனக் கூறும் போது களவெடுப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கும்.
அழகியல்:- அழகியலிலும் விஞ்ஞானம் ஆகும். இது நியமம் கூறும் விஞ்ஞானம் என்ற பகுதிக்குள் உள்ளடங்கப்படும். அழகியல், ரசனை, வடிவு ஆகிய எண்ணக்கருக்களை அளவீடு செய்யும் ஒன்றாக காணப்படுகிறது. மேலும் இது சரி, பிழை, நன்மை, தீமை போன்ற பெருமானங்களையும் மதிப்பீடு செய்கின்றது.
மற்றுமொரு வகையிலும் விஞ்ஞானத்தின் பாகுபாட்டை அவதானிக்கலாம். அவை தூய விஞ்ஞானம், பிரயோக விஞ்ஞானம் என்பதாகும்.
தூய விஞ்ஞானம்:- தூய விஞ்ஞானம் என்பது அறிவைப் பெரும் நோக்கில் அமைந்த விஞ்ஞானம் ஆகும். விஞ்ஞான அறிவை பெரும் பொருட்டு விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி கொள்கைகள் மற்றும் விதிகள் என்பவற்றை கண்டறிந்து அவற்றுக்கு விளக்கங்களை வழங்கும் துறையாக தூய விஞ்ஞானம் காணப்படுகின்றது . இதில் இயற்கை விஞ்ஞானத்தில் அடங்கும் பௌதீகவியல், இரசானவியல், தாவரவியல், உயிரியல் என்பன அடங்கும்.
பிரயோக விஞ்ஞானம்:- இது அறிவை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அதாவது தூய விஞ்ஞான மூலம் பெற்ற அறிவை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்கள், சேவைகள் என்பவற்றை உருவாக்கும் விஞ்ஞானமாக பிரயோக விஞ்ஞானம் காணப்படுகின்றது. இதில் தொழில்நுட்பவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என்பன உள்ளடங்கும்.
இவ்வாறாகப் பரந்துபட்ட ஒர் அறிவியல் துறையான விஞ்ஞானமானது பல்வேறு வகைகளாக வகைப்படுத்தி ஆராய்வதே நாம் அவதானிக்கலாம்.
<3
ReplyDelete