விஞ்ஞானமும் அதன் வகைகளும் விஞ்ஞானம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு துறையாகும். மனித நாகரீகங்கள் எப்போது தோற்றம் பெற்றதோ அன்றே விஞ்ஞானத்தின் தோற்றமும் ஆரம்பமாகியதாக கூறப்படுகிறது. மனிதன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு தன்னைச் சூழ உள்ள பொருட்களை பார்த்து வியக்கத் தொடங்கி விஞ்ஞானம் ஆரம்பம் ஆகியது. விஞ்ஞானம் என்பது ஆங்கிலத்தில் science எனப்படுகிறது. அந்த வகையில் விஞ்ஞானம் எனும் பதம் கண்டுபிடித்தல், அறிவு எனப் பொருள்படும். விஞ்ஞானம் பல்வேறு விடயங்களையும் தெளிவாக ஆய்வு செய்திருந்த போதிலும் ஆய்வு செய்கின்ற விடயத்தை வைத்து விஞ்ஞானத்திற்கு குறித்த ஒரு வரைவிலக்கணத்தை முன்வைப்பது கடினமாகும். காரணம் விஞ்ஞானம் பரந்துபட்டது. எனவே அதனை குறிப்பிட்ட எல்லை வரையறைக்குள் இருந்து விளக்க முடியாது. எனினும் பொதுவாக விஞ்ஞானம் என்பதை " அறிவையும் புலக்காட்சியையும் ஆதாரமாகக் கொண்டு மக்களுக்குத் தேவையான சௌகரியங்களை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு புதிது புதிது காணும் துறை விஞ்ஞான துறை". என குறிப்பிடலாம். மேலும் விஞ்ஞானம் என்பதை இயற்கை உலகு பற்றிய கோட்பாட்டு ரீதியான, அனுபவ ரீதியான நடை...